தமிழ்நாடு

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்.. ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ : அதிரடி காட்டும் DGP சைலேந்திரபாபு !

கஞ்சா விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலிஸாருக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்.. ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ : அதிரடி காட்டும் DGP சைலேந்திரபாபு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் குற்றங்களைத் தடுக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டையைத் தடுக்க கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை போலிஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கஞ்சா விற்பனையை முற்றாகத் தடுக்கும் வகையில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 அதிரடி திட்டத்தை டி.ஜி.பி சைலேந்திர பாபு கையில் எடுத்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டி.ஜி.பி சைலேந்திரபாபு போலிஸாருக்கு விடுத்துள்ள உத்தரவில், "பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ஏப்ரல் 27ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடத்த வேண்டும்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களைக் கண்டறிந்து மனநல ஆலோசகரிடம் அனுப்பி ஆலோசனை வழங்கவேண்டும். அண்டை மாநில போலிஸாருடன் இணைந்து கஞ்சா செடி ஒழிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories