தமிழ்நாடு

“பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு” : சென்னை ஐகோர்ட் பாராட்டு!

தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

“பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழ்நாடு அரசு” : சென்னை ஐகோர்ட் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தர்மபுரி மாவட்டம் பி கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 2006 இல் தனக்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018 ல் கணவரை பிரிந்து விட்ட நிலையில் ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்..தொடரந்து பேறுகால விடுப்பு கேட்டு, தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தபோது ,

மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுதியின் அடிப்படையில், இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் மறுமணத்தின் காரணமாக மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என

மறுத்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார் .தான் 2017இல் தான் அரசு பள்ளி ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததாகவும் எனவே தனக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும் புதிதாகப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதனால் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories