தமிழ்நாடு

குடும்ப வறுமையால் நேர்ந்த அவலம்.. விடா முயற்சியால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ‘ஆட்டோ ஓட்டுநர்’ !

புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில், ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குடும்ப வறுமையால் நேர்ந்த அவலம்.. விடா முயற்சியால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ‘ஆட்டோ ஓட்டுநர்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி, ஜீவா நகரை சேர்ந்த கந்தன் (31) என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார்.

மேலும் இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமாகி 1 வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதும், எப்படியாவது தனது கனவை நனவாக்கும் வேண்டும் என்பதால், ஆட்டோ ஓட்டிக்கொண்டே உடலை தகுதி செய்துக்கொண்டு, எழுத்து தேர்வுக்கும் தயரானார் கந்தன்.

பல்வேறு இன்னல்கள் வந்த சூழலிலும் தனது விடா முயற்சியால் உடல் தகுதி தேர்வில் தேர்வான அவர், அண்மையில் நடந்த எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது விடா முயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories