Tamilnadu

🔴 Tamil Nadu Budget 2022 Live : நிதி நிலை அறிக்கை தாக்கல் - துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

🔴 Tamil Nadu Budget 2022 Live : நிதி நிலை அறிக்கை தாக்கல் - துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
18 March 2022, 06:39 AM
18 March 2022, 05:56 AM

அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.

தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்.

நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு.

18 March 2022, 05:29 AM

8 ஆயிரம் கோடிக்கு மேல் குறையப்போகும் வருவாய் பற்றாக்குறை.. பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் PTR தகவல்!

18 March 2022, 05:24 AM

துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.7,400 கோடி ஒதுக்கீடு!

பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு!

- நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

18 March 2022, 05:21 AM

ஜி.எஸ்.டி இழப்பீடு - 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்!

ஜி.எஸ்.டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழகம் சந்திக்கும்.

ஜி.எஸ்.டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்!

18 March 2022, 05:21 AM

தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு!

தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு

அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழில் கற்பிக்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசின் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்!

18 March 2022, 05:20 AM

பெரியாரின் சிந்தனைகள் - 21 மொழிகளில் அச்சிடப்படும்!

தந்தை பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18 March 2022, 04:56 AM

8 ஆண்டுகளுக்கு பின்னர் அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது !

18 March 2022, 04:39 AM

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

தமிழக சட்டப் பேரவை இன்று (18.3.2022) கூடியது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (18.3.2022) தொடங்குகிறது. இன்று (18.3.2022) காலை 10 மணிக்கு 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories