தமிழ்நாடு

புறாவுக்கு போரா? நிஜத்தில் நடந்த சினிமா வசனம் : புறா விற்பனையில் இருவர் கைதானது ஏன்? நடந்தது என்ன?

பட்டினம்பாக்கம் பகுதியில் புறா விற்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது.

புறாவுக்கு போரா? நிஜத்தில் நடந்த சினிமா வசனம் : புறா விற்பனையில் இருவர் கைதானது ஏன்? நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை , பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் குடிசைப்பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் (24) இவருடைய நண்பர் வெங்கடேசன் என்பவரும் சேர்ந்து பட்டினப்பாக்கம் பகுதியில் ஒரு புறாவை பிடித்து விற்று பணமாக்கி மது அருந்தலாம் என திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரகாஷ், வெங்கடேஷ்க்கு தெரியாமல் புறாவை தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார், பின்னர். நேற்று (15.03.2022) மதியம் வெங்கடேசன், புறா எங்கே என்று பிரகாஷிடம் கேட்டபோது, புறாவை அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டேன் என்று கூறவே, இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு இருவரும் சென்றுவிடுகின்றனர்.

பின்னர் வெங்கடேசன் தனது நண்பரான விக்னேஷ் (எ) விக்கி என்பவருடன் சேர்ந்து, நேற்று (15.03.2022) இரவு சுமார் 08.30 மணியளவில் மேற்படி புகார்தாரர் பிரகாஷின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கத்தி மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு, இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

புறாவுக்கு போரா? நிஜத்தில் நடந்த சினிமா வசனம் : புறா விற்பனையில் இருவர் கைதானது ஏன்? நடந்தது என்ன?

இச்சம்பவத்தில் தலையில் பலத்த இரத்த காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரகாஷின் தாயார் கற்பகம் (40) பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பட்டினம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி புகார்தாரரை கத்தி மற்றும் கட்டையால் தாக்கிய வெங்கடேசன் (25), விக்னேஷ் (எ) விக்கி, (22), ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி மற்றும் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மீது, மெரினா காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும், விக்னேஷ் (எ) விக்கி மீது, திருவான்மியூர் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அரசு சொத்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக 1 வழக்கும் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், இன்று (16.03.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

banner

Related Stories

Related Stories