தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு; விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் வாகனம் நிறுத்த இலவசம்!

மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு; விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் வாகனம் நிறுத்த இலவசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஆற்காடு சாலையில் நடைபெறும் போரூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகளை முன்னிட்டு லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக, ஏற்கனவே சோதனை முறையில் அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் மேலும் 60 நாட்களுக்கு அதாவது வரும் 14ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வியபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மெட்ரோ ரயில் பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் போக்குவரத்து காவல் துணை ஆணையர் இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து இன்று வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது இயங்கி கொண்டிருக்கிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு; விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் வாகனம் நிறுத்த இலவசம்!

இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மெட்ரோ நிறுத்தங்களும் பொது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories