தமிழ்நாடு

“உஷாரய்யா உஷாரு” : கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. பிடிபட்டது எப்படி?

பேருந்து நடத்துநரிடம் ரூ.2 ஆயிரம் திருடிய கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

“உஷாரய்யா உஷாரு” : கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. பிடிபட்டது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து முத்தனேந்தல் பகுதிக்கு வந்தபோது இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் பேருந்தில் இருந்தவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு அவசர அவசரமாகக் கீழே இறங்கினர்.

அப்போது, பேருந்து படிக்கட்டின் அருகே நின்றிருந்த நடத்துநரை இடித்துத் தள்ளிவிட்டு அவருக்குத் தெரியாமல், நடத்துநருக்கான பணப் பையிலிருந்து ரூ. 2 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

இதை பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் பார்த்து நடத்துநரிடம் கூறியுள்ளார். உடனே பேருந்தில் இருந்தவர்கள் அந்த நான்கு பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை மானாமதுரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இந்த நான்கு பேரும் கூட்டமாக இருக்கும் பேருந்துகளில் ஏறி ஏமாறும் பயணிகளிடம் பணத்தைத் திருடிவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த 4 பேர் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories