தமிழ்நாடு

”இன்று முழு கட்டுப்பாடும் பெண்கள் கையில்தான்” -சென்னை விமானநிலைய கன்ட்ரோல் ரூம் பணிகளை அலங்கரித்த மகளிர்!

சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறைகளில் முழுவதுமாக பெண் ஊழியா்கள், பெண் அதிகாரிகள் பணியாற்றி 274 விமானங்களை பாதுகாப்பாக பத்திரமாக இயக்கி சாதனைப்படைத்துள்ளனர்.

”இன்று முழு கட்டுப்பாடும் பெண்கள் கையில்தான்” -சென்னை விமானநிலைய கன்ட்ரோல் ரூம் பணிகளை அலங்கரித்த மகளிர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை விமான நிலையத்தில் புதுமையான முறையில் சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஓரிரு விமானங்களை பெண் விமானிகள், பொறியாளா்களே இயக்குவார்கள். அதுதான் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அதைப்போன்ற பெண்கள் விமானங்கள் இயக்குவது நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக சென்னை விமான நிலையத்தில் புதுமையான ஒரு முறையை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா செயல்படுத்தியது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது, வானில் பறப்பது, தரை இறங்குவது உட்பட அனைத்துப் கட்டுப்பாட்டு பணிகளிலும் பெண் ஊழியர்கள், பெண் அதிகாரிகள் மட்டுமே ஈடுப்பட்டனா்.

”இன்று முழு கட்டுப்பாடும் பெண்கள் கையில்தான்” -சென்னை விமானநிலைய கன்ட்ரோல் ரூம் பணிகளை அலங்கரித்த மகளிர்!

சென்னை விமான நிலையத்தில் ஏா் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் வான் போக்குவரத்து கட்டுப்பாடு, கிரவுண்ட் கண்ட்ரோல் எனப்படும் தரை தள கட்டுப்பாடு, கிளியரன்ஸ் டெலிவரி எனப்படும் அனுமதி வழங்குதல், டவா் கண்ட்ரோல் எனப்படும் கோபுரக் கட்டுப்பாடு, கம்யூனிகேசன் அப்ரோச் கண்ட்ரோல் எனப்படும் தகவல் தொடா்பு கட்டுப்பாடு, ஏா்போா்ட் ஏரியா கண்ட்ரோல் எனப்படும் விமான நிலைய பரப்பு கட்டுப்பாடு என்று 6 வகையான கட்டுப்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமானங்கள் பத்திரமாக பாதுகாப்புடன் புறப்படுவது, வானில் பறப்பது, தரை இறங்குவது ஆகியவற்றுக்கு இந்த 6 வகை கட்டுப்பாடுகள் மிக மிக முக்கியமானது.

சென்னை விமான நிலையத்தில் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பிரிவுகளில் மொத்தம் 450 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 287 பேர் பெண் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்.

இன்றைய தினம் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் அனைத்து விமானங்கள் புறப்படுவது, வானில் பறப்பது, தரை இறங்குவது உட்பட அனைத்து பணிகளிலும் இந்த 6 கட்டுப்பாட்டு பிரிவிலும் பெண் ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டனர். 287 ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் சுழற்சி முறையில் பணியாற்றினா்.

”இன்று முழு கட்டுப்பாடும் பெண்கள் கையில்தான்” -சென்னை விமானநிலைய கன்ட்ரோல் ரூம் பணிகளை அலங்கரித்த மகளிர்!

அவ்வாறு ஈடுபட்ட அவர்கள் இன்றைய தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து 226 உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு, வருகை அதேபோல் 32 சர்வதேச விமானங்களின் புறப்பாடு, வருகை 18 தனி விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் புறப்பாடு வருகை மொத்தம் 274 விமானங்களை பத்திரமாக பாதுகாப்பான முறையில் புறப்பட்டு, வானில் பறந்து, தரையிறங்க இறங்குவது போன்ற பணிகளை செய்து பெண்கள் சாதனை படைத்தனா்.

சென்னை விமான நிலையம் முழுவதும் பெண் ஊழியா்கள், அதிகாரிகளால் செயல்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இது பற்றி சென்னை விமான நிலைய தென் மண்டல நிர்வாக இயக்குனர் ஆர் மாதவன் கூறுகையில், இது ஒரு மிகப்பெரிய சாதனை. பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு பெண் பணியாளர்கள் செய்து காட்டி சாதனை படைத்துள்ளனர். இன்னும் வரும் ஆண்டுகளில் மேலும் பல சாதனைகளை படைக்க இருக்கின்றனர் என்று கூறினார்

அதேபோல் பொது மேலாளர் முத்து கூறுகையில், இது நாங்கள் சோதனை அடிப்படையில் தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் இது மிகப்பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. ஆண் ஊழியர்கள் இல்லாமலே, தனித்துப் பெண்கள் விமானங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்க முடியும் என்பதை செய்துகாட்டி சாதனை படைத்துள்ளனர் என்று கூறினாா்.

banner

Related Stories

Related Stories