உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
இதனால் உக்ரைனில் தங்கிப்படிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான பேர் நாடு திரும்பி வருகின்றனர். இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர்.
இதனால் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தியபடி அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதனால் அவர்களால் எளிதில் எல்லைகளைக் கடக்க முடிவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான், துருக்கி நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் விடுதியிருந்து இந்தியக் கொடியை பிடித்துக்கொண்டே ருமேனியா வழியாக புக்கரெஸ்ட் வந்தடைந்தனர். இந்தியாவின் தேசியக் கொடி இருந்ததால் நாங்கள் எளிதில் கடந்து வந்ததாக அவர்கள் தெரிவித்டு வந்துள்ளனர்.