பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார் மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஹள்ளி பகுதியில் இயங்கி வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மீதான புகார் மீதும் உடனடியாக தக்க நடவடிக்க எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, லிங்கநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சேரன் (50).
இவர், அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கணக்கு பாடம் போட்டு சேரனிடம் காட்டியிருக்கிறார். அப்போது தவறாக கணக்கு போட்டதாகச் சொல்லி அந்த மாணவியின் கண்ணத்தை கிள்ளியும், முதுகிலும் தட்டியிருக்கிறார்.
இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி, பெற்றோரிடம் சேரனின் செயல் குறித்து கூற அவர்கள் கடத்தூர் போலிஸிடம் புகார் கூறியிருக்கிறார்கள்.
அதன் பேரில் கணக்கு ஆசிரியர் சேரனை கைது செய்த போலிஸார் மாணவியின் கண்ணத்தை கிள்ளி, முதுகை தட்டியது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.