தமிழ்நாடு

”ஹேப்பி பர்த்டே நெம்பர் 1 CM” - சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் உள்ள சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”ஹேப்பி பர்த்டே  நெம்பர் 1 CM” - சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்வைத் திறன் பாதிப்பு, காது கேளாதோர், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான லிட்டில் ஃப்ளவர் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் தனது 69 வது பிறந்தநாளை முதலமைச்சர் கேக் வெட்டி கொண்டாடினர்.

முன்னதாக அச்சிறப்பு பள்ளி மாணவர்கள் மேல தாளங்கள் முழங்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். பின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி குறித்த அப்பள்ளி மாணவர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதை பார்த்து ரசித்து கவனித்த முதலமைச்சர், அம்மாணவர்களுக்கும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் லிட்டில் ஃப்ளவர் சிறப்பு பள்ளியின் வளர்ச்சிக்காக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை நன்கொடையாக முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக முதலமைச்சருடனும் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சிறப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, மகள் செந்தாமரை சபரீசன், முதலமைச்சரின் பேரக்குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் திமுக தலைவர் தனது பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது ஒவ்வொரு பிறந்தநாளன்றும் உங்களுடன் கொண்டவதுதான் எனக்கு மகிழ்ச்சி. யார் என்னை வாழ்த்தினாலும், உங்கள் வாழ்த்துக்கு தனி சிறப்பு. எனக்கு வயது 69. ஆனால் எனக்கு 69 இல்லை, 39 தான் இருக்கும் என நீங்கள் சிந்திக்கிறீர்கள், இதற்கு காரணம் நான் பின்பற்றும் உணவு, உடற்பயிற்சி போன்றவை தான்.

இந்த பதவியை பெரும் பதவியாக கருதவில்லை, அதை நான் பொறுப்பாக கருதுகிறேன். எனக்கு இந்த பிறந்தநாளின் முதல் வாழ்த்துகளை தெரிவித்து நீங்கள் தான், அதற்கு பிறகு தான் கட்சியினர், தலைவர்கள் எல்லாம் வாழ்த்துகள் தெரிவிக்க உள்ளனர் எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories