தமிழ்நாடு

‘இனி மீண்டும் தொடர்ந்தால்’.. prankshow வீடியோ வெளியிடும் youtube சேனலுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை !

kovai 360 யூடியூப் சேனலுக்கு போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘இனி மீண்டும் தொடர்ந்தால்’.. prankshow வீடியோ வெளியிடும் youtube சேனலுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் youtube பயன்படுத்தி பலர் ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் prank show என்ற பெயரில் ஆபாசமாகவும், வெறுப்பை துண்டும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், kovai 360 யூடியூப் சேனல் prank show என்ற பெயரில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கன்டென்ட்டுகளை உருவாக்கி அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக சாலையில் நடந்து செல்பவர்களின் முகத்தில் அடிப்பது போல் நடிப்பது, எலக்ட்ரிக் சாக்கொடுப்பது போன்று மக்களைப் பீதியடையவைக்கும் வகையில், நடந்துகொள்கிறார்கள். இப்படியான கன்டென்ட்டுகளையே இந்த யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பகீர்ந்து, அநாகரீகமாக நடந்துகொள்ளும் இந்த யூடியூப் சேனல் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது ட்விட்டர் பதிவிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைப்பார்த்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சரவணன், "இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் பதிவுசெய்யப்பட்டது. நிகழ்ச்சி வெளியானவுடன் அந்த YouTube நிர்வாகிகளுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கப்பட்டதில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்தால் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories