தமிழ்நாடு

₹5 கோடி மோசடி.. மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது : பிடியை இறுக்கும் காவல்துறை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவான நிலையில் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

₹5 கோடி மோசடி.. மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது : பிடியை இறுக்கும் காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது தி.மு.க. தொண்டரை அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்தால் ஜெயக்குமார் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகேஷ் என்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு சொந்தமான 8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டுள்ளார் என்றும் இதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும் எனவும் தெரித்துள்ளார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள் ஜெயப்பிரியா, நவீன் ஆகியோர் மீது குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், கொடுங்காயத்தை ஏற்படுத்துதல், கொள்ளையடித்தல், கொலை மிரட்டல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலிஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளநிலையில், மூன்றாவதாக தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கில் வரும் திங்களன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலிஸார் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

banner

Related Stories

Related Stories