தமிழ்நாடு

உள்ளாட்சியிலும் நல்லாட்சி நிச்சயம்: தனி பெரும்பான்மையுடன் வெற்றிக் கண்ட தி.மு.க.!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி கொடி நாட்டியிருக்கிறது.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி நிச்சயம்: தனி பெரும்பான்மையுடன் வெற்றிக் கண்ட தி.மு.க.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இதுகாறும் அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த தேர்தல் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் வெளியான முடிவுகளில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை திமுக ருசித்திருக்கிறது.

அதன்படி வார்டு வாரியாக வெளியான வெற்றி நிலவரம்:-

கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் வெற்றி தி.மு.க கூட்டணி 32 இடங்களிலும், அ.தி.மு.க 7, பா.ஜ.க.10, சுயேட்சை 2 என பதிவாகியிருக்கிறது.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் 49 வார்டுகளை தி.மு.க வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

திமுக - 49, காங்கிரஸ் -5, மதிமுக - 2, CPI 1, CPIM 1, விசிக -1 என 59 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

அமமுக - 1, அதிமுக - 3, சுயேட்சை-2 வெற்றி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் இறுதி நிலவரம்:

திமுக - 44, காங்கிரஸ் - 3, சிபிஐஎம் - 1, ஐயூஎம்எல் - 1, மதிமுக - 1 வெற்றி பெற்று 50 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி.

அதிமுக - 4, சுயேட்சை - 1 வெற்றி பெற்றிருக்கிறது.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில்

திமுக - 20, சிபிஐ 5, சிபிஎம் 1, மதிமுக 3, காங்கிரஸ் 1, இந்திய முஸ்லிம் லீக் 1 வெற்றி பெற்று 31 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி - 16 , பாஜக - 1, சுயேட்சை - 2 இடங்களில் வெற்றி.

மதுரை

மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தற்போது வரை 98 வார்டுகளுக்கான முடிவுகல் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக 66 , காங்கிரஸ் 5, விசிக 1, சிபிஎம் 4 , மதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி மட்டுமே 79 வார்டுகளில் வென்றிருக்கிறது.

அதிமுக 14, பாஜக 1, சுயேட்சை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 3-ம் பேரூராட்சிகளில் திமுக அமோக வெற்றி

திருப்பத்தூர் நகராட்சி

திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளின் 24 இடங்களில் திமுக வெற்றிபெற்று திருப்பத்தூர் நகராட்சியை கைப்பற்றியது.

திமுக - 24, விசிக - 1 பெற்று திமுக கூட்டணி 25 இடங்களில் வெற்றி.

அதிமுக - 5, பாமக - 1, சுயேட்சை - 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஜோலார்பேட்டை நகராட்சி

ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 16 இடங்களில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது.

அதிமுக 2 இடங்களே பெற்றிருந்தது.

வாணியம்பாடி நகராட்சி

வாணியம்பாடி நகராட்சியில் திமுக மட்டுமே 26 வார்டுகளில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது.

கூட்டணி கட்சியான மதிமுக - 1, விசிக - 1, இந்திய முஸ்லிம் லீக் - 1 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. சுயேட்சை - 7 இடங்களில் வெற்றி.

ஆம்பூர் நகராட்சி

ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகளில் 20 இடங்களில் திமுக வெற்றி

திமுக - 20, இந்திய முஸ்லிம் லீக் - 3, காங்கிரஸ் - 1, மனிதநேய மக்கள் கட்சி - 1 இடங்களில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது.

அதிமுக - 5, சுயேட்சை - 5, பாஜக - 1 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.

banner

Related Stories

Related Stories