ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
21 மாநகராட்சிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே கைப்பற்றும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டல மாவட்டங்களை திமுக கைப்பற்றி வருகிறது. அதுபோக, அதிமுகவினரின் சொந்த தொகுதிகளிலும் திமுக வெற்றியை ருசித்து வருகிறது.
அவ்வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்திற்குட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியை 40 ஆண்டுகளுக்கு கைப்பற்றியிருக்கிறது திமுக.
அதேபோல, எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி, திருப்பூர், சேலம், ஈரோடு என வளைத்து வளைத்து திமுகவின் வெற்றிக் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. இவை அனைத்தும் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.