தமிழ்நாடு

“எல்லாம் போச்சே..” மண்ணைக் கவ்விய அ.தி.மு.க : எங்கும் தோல்வி.. சோகத்தில் அழுத அ.தி.மு.க நிர்வாகி!

அ.தி.மு.க வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து சோகமாக வெளியேறும் காட்சியும், அவருடன் செல்லும் நிர்வாகி ஒருவர் அழுதபடி செல்லும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“எல்லாம் போச்சே..” மண்ணைக் கவ்விய அ.தி.மு.க : எங்கும் தோல்வி.. சோகத்தில் அழுத அ.தி.மு.க நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன். அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களின் கோட்டைகள் என கருத்தப்பட்டு வந்த பல பகுதிகளை தி.மு.க தகர்த்தெறிந்துள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் 23வது வார்டில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநயக்கனூர் - குச்சனூர் பேரூராட்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் சொந்த தொகுதிகளான உடுமலை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கோவை ஆகிய பல பகுதிகளில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் முகமது இப்ராம்சா 1 வாக்கு கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளார். இது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து சோகமாக வெளியேறும் காட்சியும், அவருடன் செல்லும் நிர்வாகி ஒருவர் அழுதபடி செல்லும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories