தமிழ்நாடு

சென்னையில் வாக்குப்பதிவு வெகுவாகக் குறைவு... மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு முழு விபரம் இங்கே..!

சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் வாக்குப்பதிவு வெகுவாகக் குறைவு... மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு முழு விபரம் இங்கே..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு நேற்று காலை தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

நேற்று காலை ஏழு மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். முதியவர்கள் முதல், முதல்முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு பெற்ற இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதரப்பு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவிட்டனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னையில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தருமபுரி மவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், மாநகராட்சி பகுதிகளை விட பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு:

அரியலூா் 75.69 (பேரூராட்சி - 81.04, நகராட்சி- 73.99)

செங்கல்பட்டு 55.30 (பேரூராட்சி - 80.67, நகராட்சி-63.08, மாநகராட்சி-49.98 )

சென்னை 43.59

கோயம்புத்தூா் 59.61 (பேரூராட்சி -73.83 , நகராட்சி- 67.09, மாநகராட்சி-53.61)

கடலூா் 71.53 (பேரூராட்சி 73.26 - , நகராட்சி- 72,21, மாநகராட்சி - 68.19)

தருமபுரி 80.49 (பேரூராட்சி - 80.14, நகராட்சி- 81.37)

திண்டுக்கல் 70.65 (பேரூராட்சி -75.88 , நகராட்சி- 67.26, மாநகராட்சி- 64.01 )

ஈரோடு 70.73 (பேரூராட்சி 79.42- , நகராட்சி- 74.14, மாநகராட்சி -61.91 )

கள்ளக்குறிச்சி 74.36 (பேரூராட்சி -76.93 , நகராட்சி-72.57 )

காஞ்சிபுரம் 66.82 (பேரூராட்சி - 73.63 , நகராட்சி- 68.79, மாநகராட்சி-64.25)

கன்னியாகுமரி 65.72 (பேரூராட்சி -67.86 , நகராட்சி-63.18, மாநகராட்சி-60.94 )

கரூா் 76.34 (பேரூராட்சி -86.43 , நகராட்சி- 6.15, மாநகராட்சி-75.84 )

கிருஷ்ணகிரி 68.52 (பேரூராட்சி - 75.80 , நகராட்சி- 75.32 மாநகராட்சி-63.97 )

மதுரை 57.09 (பேரூராட்சி -79.42 , நகராட்சி- 71.33, மாநகராட்சி- 53.99)

மயிலாடுதுறை 65.77 (பேரூராட்சி - 69.47 , நகராட்சி- 64.07)

நாகப்பட்டினம் 69.19 (பேரூராட்சி -77.30 , நகராட்சி-66.68 )

நாமக்கல் 76.86 (பேரூராட்சி -80.83 , நகராட்சி- 74.03 )

பெரம்பலூா் 69.11 (பேரூராட்சி -72.47 , நகராட்சி- 66.01)

புதுக்கோட்டை 69.61 (பேரூராட்சி -76.94 , நகராட்சி- 66.11)

ராமநாதபுரம் 68.03 (பேரூராட்சி -73.18 , நகராட்சி- 66.25 )

ராணிப்பேட்டை 72.24 (பேரூராட்சி -82.13 , நகராட்சி- 69.10)

சேலம் 70.54 (பேரூராட்சி - 78.49, நகராட்சி- 76.61)

சிவகங்கை 67.19 (பேரூராட்சி -69.66 , நகராட்சி-65.53 )

தென்காசி 70.40 (பேரூராட்சி -73.14 , நகராட்சி- 68.63)

தஞ்சாவூா் 66.12 (பேரூராட்சி -72.18 , நகராட்சி- 64.95, மாநகராட்சி - 62.45)

தேனி 68.94 (பேரூராட்சி - 72.64 , நகராட்சி-65.88 )

நீலகிரி 62.68 (பேரூராட்சி -66.29 , நகராட்சி-59.98 )

தூத்துக்குடி 63.81 (பேரூராட்சி -73.52 , நகராட்சி- 62.70, மாநகராட்சி- 59.11)

திருச்சி 61.36 (பேரூராட்சி - 74.87, நகராட்சி- 70.44, மாநகராட்சி 57.25)

திருநெல்வேலி 59.65 (பேரூராட்சி -69.20 , நகராட்சி- 67.22, மாநகராட்சி- 52.45)

திருப்பத்தூா் 68.58 (பேரூராட்சி -73.45 , நகராட்சி-67.89 )

திருப்பூா் 60.66 (பேரூராட்சி 75.34- , நகராட்சி- 66.35, மாநகராட்சி-55.40)

திருவள்ளூா் 65.61 (பேரூராட்சி -74.92 , நகராட்சி-68.26, மாநகராட்சி- 59.13)

திருவண்ணாமலை 73.46 (பேரூராட்சி -80.07 , நகராட்சி-70.26 )

திருவாரூா் 68.25 (பேரூராட்சி - 72.69, நகராட்சி-66.28 )

வேலூா் 66.68 (பேரூராட்சி -79.09 , நகராட்சி-66.00, மாநகராட்சி -65.50 )

விழுப்புரம் 72.39 (பேரூராட்சி -79.67 , நகராட்சி- 69.49)

விருதுநகா் 69.24 (பேரூராட்சி -76.55 , நகராட்சி- 67.12, மாநகராட்சி- 68.47)

banner

Related Stories

Related Stories