தமிழ்நாடு

சோதனைக்கு பயந்து கடத்தல் தங்கத்தை மறைத்த பயணி; ரூ.21.50 லட்சம் மதிப்பு தங்கப்பசை சிக்கியது எப்படி?

சோதனைக்கு பயந்து கடத்தல் தங்கத்தை மறைத்த பயணி; ரூ.21.50 லட்சம் மதிப்பு தங்கப்பசை சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துபாயிலிருந்து இண்டிகோ விமானம் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் விமானத்தை சுத்தம் செய்வதற்காக சென்ற துப்புரவு பணியாளர் ஒருவர் விமானத்தின் இருக்கையில் பண்டில் போன்று ஒன்று உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் சோதனை செய்த போது இருக்கைக்கு அடியில் பேண்டேஜ் சுற்றப்பட்டது போன்று பேஸ்ட் படிவமாக தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனை கைப்பற்றிய அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து இருக்கையில் வைத்து சென்றதாக தெரிய வந்திருக்கிறது.

கைப்பற்றப்பட்ட தங்கமானது 421 கிராம் எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 21.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து விமானத்தின் இருக்கையில் தங்கத்தை வைத்து சென்ற பயணி குறித்து பயண விவரங்களை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories