தமிழ்நாடு

கரூரில் பணப்பட்டுவாடா புகார்.. அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்தது பறக்கும் படை!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 38 வது வார்டில் வாக்காளர்களுக்கு அதிமுக கொடுக்க வைத்திருந்த 38 செல்போன்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

கரூரில் பணப்பட்டுவாடா புகார்.. அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்தது பறக்கும் படை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக மாவட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்று வந்த நிலையில் கரூர் மாநகராட்சி 38வது வார்டு பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர்

இப்பொழுது 38 ஆவது வார்டு பகுதியில் மாரியாயி என்ற பெண்மணி வைத்திருந்த பையில் 11 கீபேட் செல்போன்கள் இருந்தன. மேலும், அந்த பெண் வைத்திருந்த பையில் அதிமுக சார்பில் 38 வது வார்டில் போட்டியிடும் சரவணன் ( முன்னாள் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்) என்பவரது பெயர் பொறிக்கப்பட்ட டோக்கன்பளும் இருந்தன.

இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்த பொழுது. அவை அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தது தெரியவந்தது

இதுகுறித்து அந்த பெண் அளித்த தகவலின் பேரில் அதே வார்டில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர் அந்த வீட்டிலும் இருபத்தி ஏழு செல்போன்கள் இருந்தன. இதையடுத்து 38 செல்போன்ன்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்ர் சரவணன் பெயர் பொறிக்கப்பட்ட டோக்கன்களையும் பறிமுதல் செய்யப்பட்டன. போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories