தமிழ்நாடு

“நீட் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது” : பரப்புரையில் EPS, OPS கும்பலை சாடிய முத்தரசன் !

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறது என முத்தரசன் சாடியுள்ளார்.

“நீட் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது” : பரப்புரையில் EPS, OPS கும்பலை சாடிய முத்தரசன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் தேர்தலில் போட்டியிடும் மதசார்மற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் பேசுகளையில், “11 ஆண்டுகாலம் நகர்புற அமைப்புகளுக்கான தேர்தலை அச்சத்தின் காரணமாக அ.தி.மு.க நடத்தவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகர்புற அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவோம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முறையில் தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் அணிவகுத்ததை போல தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இப்போது மட்டுமல்ல நாளையும் இந்த கூட்டணி தொடரும், இது கொள்கைக்கான கூட்டணி. ஆனால் எதிர்தரப்பில் உள்ள அணி சிதைந்து கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க, பா.ஜ.க தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் அவர்களுக்கான தொடர்பு தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. நீட் தேர்வை பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால் அ.தி.மு.க ஒரு பக்கம் ஆதரவு மற்றொரு பக்கம் எதிர்ப்பு என இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories