கரூர் பேருந்து நிலையம் அருகே கழக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார். அதன்படி, கரூர் வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில் புகலூர் (24 வார்டு) மற்றும் பள்ளப்பட்டி (27 வார்டு) உள்ளடக்கிய ஆகிய புதிய நகராட்சிகள், தோட்டக்குறிச்சி பேரூராட்சி 15-வார்டு பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், மாவட்டக் கழகப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சிவகாம சுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் மாநில நெசவாளர் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாகக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., “கரூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட 50,722 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப்போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.