தமிழ்நாடு

கணவனை கொன்று புதைத்த மனைவி.. 11 ஆண்டுக்குப் பின் வெளிவந்த உண்மை - விசாரணையில் அதிர்ச்சி : நடந்தது என்ன?

கணவனைக் கொன்று புதைத்த மனைவியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு போலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்று புதைத்த மனைவி.. 11 ஆண்டுக்குப் பின் வெளிவந்த உண்மை - விசாரணையில் அதிர்ச்சி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட குஜாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜெயந்தி. இதையடுத்து 2011ம் ஆண்டு திடீரென குணசேகரன் மாயமானர். இவர் குறித்த எந்த தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது மனைவி ஜெயந்தியிடம், குணசேகரனின் தங்கை லட்சுமி அவர் குறித்து அவ்வப்போது கேட்டுவந்துள்ளார். அப்போது எல்லாம் அவர் வேலைக்காகக் கேரளாவிற்குச் சென்றுள்ளதாக கூறிவந்துள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்வதற்கான எந்த தகவலையும் ஜெயந்தி கூற மறுத்துள்ளார்.

இதனால் ஜெயந்தியின் நடவடிக்கையில் லட்சுமிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து காணாமல் போன தனது அண்ணன் குணசேகரன் குறித்து 11 கழித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து லட்சுமி அழைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. குணசேகரன் மதுவுக்கு அடிமையானதால் மனைவியை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.

கணவனை கொன்று புதைத்த மனைவி.. 11 ஆண்டுக்குப் பின் வெளிவந்த உண்மை - விசாரணையில் அதிர்ச்சி : நடந்தது என்ன?

இந்நிலையில் 2011ம் ஆண்டு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயந்தி வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து கணவன் குணசேகரன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே உள்ள இடத்தில் குழித்தோண்டி புதைத்துள்ளார். இதையடுத்து நான்கு வருடங்கள் கழித்து கணவன் புதைத்த இடத்தை தோண்டு அரவது எலும்புகளை எடுத்து ஏரியில் வீசியுள்ளார். அவரின் இந்த வாக்குமூலத்தை அடுத்து போலிஸார் ஜெயந்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories