தேனி மாவட்டம், தளிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சக்கொடி. முதியவர்களான இந்த தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் மனைவி அம்சக்கொடியை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளார்.
இதையடுத்து உறவினர்களிடம் மனைவி காணவில்லை என தெரிவித்துள்ளார். இவரைப் பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் தனது தோட்டத்திலேயே சாக்கு மூட்டையில் கட்டி புதைத்துள்ளார்.
பின்னர் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு வேலை செய்தவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் துர்நாற்றம் வீசிய பகுதியில் தோண்டி பார்த்தபோது காணாமல் போனதாகக் கூறிய அம்சக்கொடியின் உடல் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கணவனிடம் விசாரணை நடத்தியபோது, மனைவியை அடித்துக் கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர் போலிஸார் கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.