தமிழ்நாடு

257 குற்ற வழக்குகளுக்கு உதவிய மோப்பநாய் உயிரிழப்பு.. மரியாதை செலுத்திப் பிரியாவிடை கொடுத்த போலிஸ்!

குற்ற வழக்குகளுக்கு உதவியாக இருந்த மோப்பநாய் ரேம்போ உயிரிழந்தது.

257 குற்ற வழக்குகளுக்கு உதவிய மோப்பநாய்  உயிரிழப்பு.. மரியாதை செலுத்திப் பிரியாவிடை கொடுத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம், காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு போலிஸார் ரேம்போ என பெயர் சூட்டினர்.

இதையடுத்து ரேம்போவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளை ரோம்போ கண்டறிந்தது. இப்படிக் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 257 குற்றச் சம்பவங்களில் மோப்பநாய் ரோம்போ உதவியுள்ளது.

சில நாட்களாக மோப்பநாய் ரேம்போ உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில் உயிரிழந்தது. பின்னர் பல குற்ற வழக்குகளுக்கு உதவிய ரேம்போவுக்கு திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் உரிய மரியாதையும் போலிஸார் மோப்பநாய் ரேம்போவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories