தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தடையின்றி செல்ல ‘சென்சார் கைத்தடி’.. பள்ளி மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடியில் கொரோனா விடுமுறையில் பார்வையற்றவர்கள் தடையின்றி செல்ல கைத்தடியை பள்ளி மாணவன் உருவாக்கி அசத்தியுள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தடையின்றி செல்ல ‘சென்சார் கைத்தடி’.. பள்ளி மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி ஜார்ஜ்சாலையை சேர்ந்தவர் மதினா மாற்றுத்திறனாளியான இவரின் மகன் ஷகில் இஜாஸ். இவர் தூத்துக்குடியில் உள்ள பாரத ரத்னா காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவன் பள்ளியில் அறிவியல் படைப்பு, பேச்சுபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஐம்பதுக்கு மேற்பட்ட சான்றிதழை பெற்றுள்ளான். இந்த நிலையில் தற்போது கொரோனா விடுமுறை தர்மமாக ஆன்லைனில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் ஆன்லைன் வகுப்புகள் இல்லாத நேரங்களில் ப்ளூடூத் மூலம் இயங்கும் ஸ்பீக்கர், கொசுவை ஒழிக்கும் சிறிய அளவிலான இயந்திரம், ப்ளூடூத் மூலம் இயங்கும் பொம்மை கார்கள் என பல்வேறு அறிவியல் படைப்புகளை செய்து வரும் இந்த மாணவன் தற்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்தடையின்றி செல்லும் வகையில் கைத்தடியை உருவாக்கியுள்ளார்.

இந்த கைதடியில் கொண்டு செல்லும்போது சாலைகளில் தடைகள் ஏதும் இருந்தால் சென்சார் மூலம் ஒலி எழுப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றவர்கள் சாலைகளில் செல்லும் போது தடைகள் ஏதும் இருந்தால் இந்த ஒலி மூலமாக தெரிந்து கொண்டு, நல்ல வழியில் செல்வதற்கு வழிவகை ஏற்படும் என இந்த மாணவன் தெரிவித்துள்ளார். இதுபோல் பல அறிவியல் படைப்புகளை படைத்து வரும் மாணவனை ஆசிரியர்கள் பாராட்டினார்கள்

banner

Related Stories

Related Stories