முன்னாள் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது தருமபுரியில் 53, சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சென்னையில் மூன்று இடத்தில் என 58 இடங்களிலும், அதேபோல தெலங்கானா மாநிலத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 87 லட்சட்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கமும், 6,637 கிலோ கிராம் தங்க நகைகளும், 13.85 கிலோ கிராம் வெள்ளி நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய் பணமும் வங்கி பெட்டக சாவி மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் தொடர்பாக முன்னாள் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன் சந்திரமோகன், அவரது மருமகள் வைஷ்ணவி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.