பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று இன்று என முறையே நடைபெற்றது.
இன்று காலை முதல் நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ சார்பில் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல, சிவகங்கைச் சேர்ந்த புலியூர் சூறாவளி காளை சிறப்பாக களமாடியதால் அதன் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது. அதன்படி அன்னலட்சுமி என்ற சிறுமியின் காளை சிறப்பாக களமாடியது.
வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த அன்னலட்சுமியின் பெரிய கருப்பன் என்ற காளை வெற்றி பெற்றதோடு ஏர் கூலரையும் பரிசாக வென்றுள்ளது.
இருப்பினும் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த பெரிய கருப்பனுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் களத்தில் இறங்கிய சிறுமி அன்னலட்சுமி துணியை சுற்றி மாடுபிடி வீரர்கள் மத்தியில் உற்சாகப்படுத்தினார்.
சிறுமியின் இந்த உற்சாகம் மிகுந்த வீரச்செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.