மதுரை மாவட்டம், தேனக்குடிபட்டி காட்டுப்பகுதியில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிய நிலையில் அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே கிடந்துள்ளது.
அப்போது, அங்கு வந்த ஆடு மேய்ப்பவர்கள் மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்துள்ளனர். மேலும் பாம்பின் வயிறு பெரிதாக இருந்ததால் இது மனிதனை விழுங்கிவிட்டதான நினைத்துள்ளனர். இதனால் மலைப்பாம்பு மனிதனை விழுங்கிவிட்டது என வதந்தி உடனே பரவத் தொடங்கியது.
இது குறித்து வனத்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் உடனே தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, மலைப்பாம்பின் வாயிலிருந்து இறந்த நிலையில் நாய் ஒன்று வெளியே வந்து விழுந்தது. பிறகுதான் பாம்பு மனிதனை விழுங்கவில்லை நாயை விழுந்துகியது என தெரியவந்தது. பின்னர் மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறறு மலைப்பாம்பை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றனர்.