ஆன்லைன் இனையதளமான புல்லிபாய் - bulli bai என்னும் செயலியில் பெண்கள் விற்பனைக்கு என்பது வகையில் அவதூறு கருத்துக்களையும், பெண்களை விற்பனைக்கு செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டது.
இதனிடையே டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் (முஸ்லிம்) தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்துள்ளார். புகாரின் நகலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆன்லைன் செய்தி இணையதளத்தில் பணிபுரியும் அந்தப் பெண் பத்திரிகையாளர், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் “முஸ்லிம் பெண்களைத் துன்புறுத்தவும் அவதிக்கவும் முயல்கிற” அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
புல்லிபாய் (bullibai.github.io) என்ற இணையதளம்/போர்ட்டலில் என்னைப் பற்றிய தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் ஆபாசமான சூழலில் எனது படம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு உடனடி நடவடிக்கை தேவை, ஏனெனில் இது என்னையும் அதேபோன்று இருக்கும் மற்ற சுதந்திரமான பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் துன்புறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள டெல்லி காவல்துறை, இந்த விவகாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ். சம்மந்தப்பட்ட புல்லிய் செயலி முடக்கப்பட்டடதாக ஞாயிறு பிற்பகல் தெரிவித்தார்.