தமிழ்நாடு

“நேரடி கண்காணிப்பு.. விரைவில் நிலைமை சீரடையும்” : சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

“நேரடி கண்காணிப்பு.. விரைவில் நிலைமை சீரடையும்” : சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று நள்ளிரவு நேரடியாக சென்று சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.12.2021 அன்று தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, சென்னை திரும்பியவுடன், சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 30.12.2021 அன்று நள்ளிரவு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு முதலமைச்சர் , கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மழைநீர் தேக்கம் குறித்த புகார்கள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டுப்பாட்டு அறையில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ள பிற சேவை துறைகளான காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின் துறை சார்ந்த அலுவலர்களுடன் துறை சார்ந்த புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

“நேரடி கண்காணிப்பு.. விரைவில் நிலைமை சீரடையும்” : சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் !

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோருடன் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும், இயக்கப்பட்டு வரும் மோட்டார் பம்புகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் தேவையான அளவிற்கு நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு உடனடியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் , பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படும் பணியையும், பெரியமேடு சைடனஹாம்ஸ் சாலையில் மசூதி அருகே தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்பு கொண்டு வெளியேற்றப்படும் பணியையும் மற்றும் பாரிமுனை பிரகாசம் சாலை சந்திப்பில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாலங்களில் தேங்கியிருக்கும் மழைநீர் தேக்கத்தை அகற்றவும், இரயில்கள், பேருந்துகள் இயக்கும் நேரத்தை அதிகப்படுத்திடவும், மின்சாரம் தடையின்றி கிடைத்திடவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அத்துடன், பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

“நேரடி கண்காணிப்பு.. விரைவில் நிலைமை சீரடையும்” : சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் !

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories