தமிழ்நாடு

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை” : போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை” : போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனிஸ்குமார் (27). இவர் கார் ஓட்டும் டிரைவர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியன்று இரவு 12 மணிக்கு பத்தாவது படிக்கும் மாணவி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று ஆளில்லா வீட்டுக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் வெனிஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன் டிரைவர் வெனிஸ்குமாருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரை செய்தார்.

வெனிஸ் குமாருக்கு 342 பிரிவின் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் 366 பிரிவின்கீழ் பத்து வருஷம் ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ( I) 5 (L) சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே வெனீஸ் குமார் தனக்கு விதிக்கப்பட்ட 3,000 ஆயிரம் அபராத தொகையை செலுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories