தமிழ்நாடு

“செம குளிர்.. மினி காஷ்மீர் போல் மாறிய நீலகிரி” : உறைபனி சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம்!

இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆன நிலையில், தாவரவியல் பூங்கா உட்பட பல பகுதிகளில் உறைபனி பொழிவால் மினி காஷ்மீர் போல் உதகை காட்சி அளித்துள்ளது.

“செம குளிர்.. மினி காஷ்மீர் போல் மாறிய நீலகிரி” : உறைபனி சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் நீர் பனி பொழியும், டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனி சீசன் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆறு மாத காலமாக டிசம்பர் 13ஆம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்தது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் அதிகாலை நேரங்களில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் உதகை, தலைகுந்தா, நடுவட்டம், பைக்கரா, அப்பர் பவானி, அவலாஞ்சி உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் உரை பனி பொலிவு இன்று காலை துவங்கியது.

இன்று காலை புல்வெளிகள் அனைத்தும் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் பதித்தது போல் புல்வெளிகள் அனைத்தும் பனியால் வெள்ளை வெள்ளை என படர்ந்து காணப்பட்டது . வாகனங்கள் அனைத்தும் பணியால் மூடப்பட்டிருந்தது. வீட்டின் கூரைகள் அனைத்தும் பனிமலைகள் போர்த்தப்பட்டது போல் காட்சியளித்தது.

இன்று காலை பனிப்பொழிவால் மினி காஷ்மீர் போல் உதகை காட்சி அளித்த நிலையில் குறைந்தபட்ச வெப்ப டிகிரி ஐந்து டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. கடுமையான உறைபனி பொழிவால் இன்று காலை 9 மணி வரை கடும் குளிர் காலநிலை நிலவியது.

banner

Related Stories

Related Stories