தமிழ்நாடு

PUBG விளையாடுவதற்காக, அப்பா சேர்த்து வைத்த ரூ.8 லட்சத்தை திருடிய சிறுவர்கள்.. சென்னையில் அதிர்ச்சி!

பப்ஜி விளையாடுவதற்காக சிறுவர்கள் 8 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PUBG விளையாடுவதற்காக, அப்பா சேர்த்து வைத்த ரூ.8 லட்சத்தை திருடிய சிறுவர்கள்.. சென்னையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பப்ஜி விளையாடுவதற்காக சிறுவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே ரூ.8 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் நடராஜன். இவரது ஒரு மகன் 10ஆம் வகுப்பும், மற்றொரு மகன் 12ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நடராஜன் வீடு வாங்குவதற்காக, மளிகைக்கடை வருமானம் மூலம் சிறுகச் சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார். தான் சேமித்து வைக்கும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து மகன்களை விசாரித்துள்ளார்.

பப்ஜி விளையாடுவதற்காக 8 லட்சம் பணத்தை திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், கேமில் அடுத்த லெவல் செல்லலாம் என தங்களது நண்பன் கூறியதால் அவனது பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்தார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடராஜன் அளித்த புகாரின் பேரில் சிறுவர்களின் நண்பன் மற்றும் அவனது பெற்றோர் ராஜசேகர், மெரிட் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பப்ஜி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே லட்சக்கணக்கில் பணம் திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories