தமிழ்நாடு

ஒருநாளில் மாற்றம் - நேற்று உத்தரவு.. இன்று முதல்வர் விழாவில் கணீர் குரலில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

நேற்று உத்தரவு வெளியான நிலையில், இன்று சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஒருநாளில் மாற்றம் - நேற்று உத்தரவு.. இன்று முதல்வர் விழாவில் கணீர் குரலில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சேலம் அரசு இசைப் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இதே போன்று தேசிய கீதம் விழா முடிவில் பாடப்பட்டது. அரசின் நடவடிக்கை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தேசப் பற்றாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories