ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். முதலில் அவரது மரணத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த காவலர்களே காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு காவல்துறையினர் காரணம் இல்லை என ஆதாரங்களுடன் கூறப்பட்டது.
ஆனால், மாரிதாஸ் என்பவர் தொடர்ந்து அவதூறு பரப்பிவந்த நிலையில், மணிகண்டன் இறந்த வழக்கில் காவல்துறையை விமர்சித்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து தேனி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் வழக்கில் மாரிதாஸ் என்பவரை போலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
தனியார் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் 18 நிர்வாகம் சார்பில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கடந்த ஆண்டு மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இவரின் இந்த வீடியோவால் பல பத்திரிகையாளர்களின் வேலையிழப்புக்குக் காரணமானது. இதையடுத்து அந்த மின்னஞ்சல் தங்களால் அனுப்பப்பட்டதல்ல; அது போலியானது என்று து நியூஸ் 18 பத்திரிகையாளர் வினய் சார்வாகி குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அந்த வழக்கில் இன்று மாரிதாஸை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸை கைது செய்தது வரவேற்கத்தக்கது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.