தமிழ்நாடு

பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது - சைக்கிளில் ரோந்து சென்று போலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தாம்பரத்தில் சைக்கிளில் ரோந்து சென்ற போலிஸார் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 கொலை முயற்சி குற்றவாளிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது - சைக்கிளில் ரோந்து சென்று போலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தாம்பரத்தில் சைக்கிளில் ரோந்து சென்ற போலிஸார் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த இரண்டு கொலை முயற்சி குற்றவாளிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து, அவர்களிடமிருந்து பட்டா கத்தி, போதை ஊசிகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் காவல் துறையில் வழக்கமாக சைக்கிளில் ரோந்து செல்வது வழக்கம். அதுபோல் நேற்றுமாலை உதவி ஆய்வாளர் கார்திகேயன் தலைமையில் 7 சைக்கிள்களில் காவலர்கள் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த 5 பேரை வளைத்து பிடிக்க முயன்றபோது ஒருவன் தப்பியோடிய நிலையில் விஜய் (எ) பிரதிப், கருப்பு லோகேஷ் (எ) லோகேஷ்வரன், தங்கதுரை, ஆலன்ராஜ் ஆகிய 4 பேர் பிடிபட்டனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய சோதனையின் போது, அவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், போதை ஊசிகள், 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த நிலையில், விஜய் (எ) பிரதிப், கருப்பு லோகேஷ் (எ) லோகேஷ்வரன் அகிய இருவரின் மீது ஏற்கனவே தாம்பரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

அதனால் வழிபறி செய்ய கூட்டாக இருந்தனரா அல்லது யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டனரா என விசரணை நடைபெற்று வருகிறது. மேலும் தப்பியோடிய டேவிடராஜ் என்பவனை தேடிவருகிறார்கள். தாம்பரம் போலீசார் சைக்கிளில் மிதவேக மாக ரோந்து செல்லும் போது பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த கும்பலை மடக்கி பிடித்த சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories