தமிழ்நாடு

நவ.,26,27ல் சென்னையில் மீண்டும் அதி கனமழைக்கு வாய்ப்பு; மக்களை எச்சரிக்கும் வானிலை மையம்!

வரும் நவம்பர் 26, 27 தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.,26,27ல் சென்னையில் மீண்டும் அதி கனமழைக்கு வாய்ப்பு; மக்களை எச்சரிக்கும் வானிலை மையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் அதன் இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.

அது மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும். இதனால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற தென் மாவட்டங்களில் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.,26,27ல் சென்னையில் மீண்டும் அதி கனமழைக்கு வாய்ப்பு; மக்களை எச்சரிக்கும் வானிலை மையம்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 35 செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கில் நகர்ந்து இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போது, அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் குறைவான மழை இருக்கும்.

அதை அடுத்த இரண்டு நாட்களுக்கு, நவ. 26, 27 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது புயலாக மாற வாய்ப்பு இல்லை.

banner

Related Stories

Related Stories