தமிழ்நாடு

”வேளாண் சட்டங்களை அடுத்து CAA, Neet-ம் ரத்து செய்யப்பட வேண்டும்” - தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்களை போல CAA, நீட் போன்றவற்றையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என தயாநிதிமாறன் எம்பி தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி 59 ஆ வட்டம், எல்லீஸ் சாலை தாயார் சாஹிப் தெருவில் அமைந்துள்ள அரசு இஸ்லாமியர் பள்ளியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டபட்ட புதிய வகுப்பறைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தனர்.

திருவல்லிக்கேணி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விரிவாக்கப் பணிக்காக 98 லட்சம் செலவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்டது. பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுத்தவரை பதவியேற்ற நாளில் இருந்து வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வராதவர்கள் , புற முதுகை காட்டுபவர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

விவசாயிகளை தேச விரோதிகள் என்று சொன்னது யார்? 18 மாதங்களாக கடும் குளிரில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். 15 லட்சம் கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தது யார்? வேளாண் சட்டங்களை போல சிஏஏ, நீட் போன்றவற்றையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஊழல் செய்தது. மக்களுக்கான திட்டத்தை புறக்கணித்தது முன்னாள் அமைச்சர்கள், முதல் அமைச்சர் உட்பட அனைவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்திருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories