தமிழ்நாடு

கீழே அமர்ந்த வானதி.. மேடையில் அமரச் சொன்ன முதல்வர் : அரசியல் நாகரீகத்தின் அரிச்சுவடி மு.க.ஸ்டாலின்!

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மேடைக்கு கீழ் இருக்க, மேடைக்கு வந்து அமருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

கீழே அமர்ந்த வானதி.. மேடையில் அமரச் சொன்ன முதல்வர் : அரசியல் நாகரீகத்தின் அரிச்சுவடி மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோவையில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சருடன், அமைச்சர்கள், அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் பங்கேற்ற இந்த விழாவில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் படங்கள் கூட இடம்பெறவில்லை.

இந்த விழா நடைபெறும் அரங்கில், அ.தி.மு.க கொறடா எஸ்.பி.வேலுமணி, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இவ்விழாவில் பங்கேற்காத நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மேடைக்கு கீழ் இருக்க, மேடைக்கு வந்து அமருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, வானதி சீனிவாசனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டு மேடையில் அமரவைக்கப்பட்டார். இந்த விழாவுக்கு வாழ்த்துரை வழங்கி பேசினார் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

கீழே அமர்ந்த வானதி.. மேடையில் அமரச் சொன்ன முதல்வர் : அரசியல் நாகரீகத்தின் அரிச்சுவடி மு.க.ஸ்டாலின்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவ சட்டமன்ற உறுப்பினர் என்றாலும், மேடைக்கு அழைத்து அமரவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் அப்போதைய தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர தி.மு.க எம்.எல்.ஏக்கள் பின்வரிசையில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, எதிர்க்கட்சிகளை மிகவும் கண்ணியமான முறையில் நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசியல் தளத்தில் பண்பட்ட நாகரீகம் தொடர்ந்து பேணி காக்கப்படுவது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories