வெள்ள பாதிப்பை பார்வையிடுவதாகக் கூறி முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாத இடத்தில் படகில் ஏறி அமர்ந்துகொண்டு, ஆங்கிள் பார்த்து படப்பிடிப்பு நடத்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3வது நாளாக இன்றும் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மழைநீர் தேங்கிய சாலைகளில் நடந்து சென்று பாதிப்புகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் .
இதற்கிடையே பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாகக் கூறி ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் படகில் ஏறி அமர்ந்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
வெள்ள பாதிப்பை பார்வையிடுவதாகக் கூறி முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாத இடத்தில் படகில் ஏறி அமர்ந்துகொண்டு, ஆங்கிள் பார்த்து படப்பிடிப்பு நடத்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
வெள்ள பாதிப்பை பார்வையிட வெறுங்கையோடு சென்றது மட்டுமல்லாமல், எல்லோரும் நடக்கும்போது படகில் ஏறி அமர்ந்துகொண்டு நாடகம் போடுவதா என நெட்டிசன்கள் பலரும் அண்ணாமலையின் இச்செயலை கிண்டல் செய்து வருகின்றனர். இதையொட்டி #கோமாளி_அண்ணாமலை, #GoatOnBoat ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
வீடியோவை எடிட் செய்து வெள்ளத்தை படகில் சென்று பார்வையிட்டது போல் வீடியோவை அனுப்பவும் என திருவண்ணாமலை தி.மு.க எம்.பி சி.என்.அண்ணாதுரை, அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.