தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு IPS அதிகாரிகள்.. அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர்!

பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு IPS அதிகாரிகள்.. அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் தமிழக அரசால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து ஆய்வு என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு இம்மழைக்காலத்தில் மிகச்சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சிறப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே காஞ்சிபுரத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, வேலூரில் கூடுதல் டிஜிமி அமரேஷ் பூஜாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு IPS அதிகாரிகள்.. அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர்!

பருவமழை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள்:

சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் - சென்னை

ஜெயந்த் முரளி - காஞ்சிபுரம்

கபில் குமார் - விழுப்புரம்

வன்னியப் பெருமாள் - கோவை

அம்ரேஷ் புஜாரி - வேலூர்

சைலேஷ்குமார் யாதவ் - திருச்சி

அபய் குமார் சிங் - சேலம்

மகேஷ் குமார் அகர்வால் - தஞ்சாவூர்

வினித் தேவ் வாங்கடே - திண்டுக்கல்

ஜெயராம் - மதுரை

சுமித் சரண் - ராமநாதபுரம்

அபின் தினேஷ் மொடக் - நெல்லை

முன்னதாக இன்று காலை சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏஎ.ஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories