அதிமுக ஆட்சியின் போது பழங்குடி சமுதாய மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பு வேலைகளே நடைபெற்றது.
இதனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பழங்குடியினர் பெரிதளவிலான பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க. அரசின் துரித நடவடிக்கையால் பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
அண்மையில் செங்கல்பட்டை அடுத்த பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களின் நலனுக்காக வாக்காளர் அடையாள அட்டை, நில பட்டா, நலவாரிய அட்டை என அனைத்தையும் முதலமைச்சரே நேரில் சென்று வழங்கியதோடு அவர்களது குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார்.
இப்படி இருக்கையில், மற்ற பிரிவினரை போன்று பழங்குடியினருக்கும் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்காக மானுடவியலாளரை நியமிக்க இருக்கிறது தமிழ்நாடு அரசு.
அதற்கான அரசு விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் தொடர்பான பிரசுரம் இணையத்தில் பகிரப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டுக்கு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.