சென்னை எண்ணூர் காசி கோயில் குப்பம் பகுதியில் சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. கடந்த அக்டோபர் 31ம் தேதி இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை ஐந்து முப்பது மணிக்கு கோவில் மேலாளர் சுரேஷ் கோவிலில் திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சில்லறை பணமும் மற்றும் கோவிலில் இருந்த 9 பித்தளை மணி , சாம்பிராணி தூபம் , திருடு போய்விட்டதாக எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். அதில் ஒரு இளைஞர் ஒருவர் குடிபோதையில் சாய்பாபா கோவிலுக்குள் நுழைந்து பாபா சிலை அருகே சிகரெட் பற்றவைத்து அட்டகாசம் செய்துள்ளார். அவர் யாரென்று பார்த்தபொழுது சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிமாறன் என்று தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து போலிஸா அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவனிடமிருந்து 500 ரூபாய் பணம் சாம்பிராணி தூபம், பித்தளை மணி பறிமுதல் செய்ததோடு மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.