தமிழ்நாடு

பட்டாசு புகையை சுவாசிப்பதால் என்னவெல்லாம் நேரும்? பிணி வகைகளை அடுக்கும் சென்னை KMC மருத்துவமனை முதல்வர்!

பேரியம் பச்சை நிறத்தில் காப்பர் ஊதா நிறத்தில் ஒளிரும் அது தான் சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு பிடிக்கும். ஆனால் அதனால்தான் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.

பட்டாசு புகையை சுவாசிப்பதால் என்னவெல்லாம் நேரும்? பிணி வகைகளை அடுக்கும் சென்னை KMC மருத்துவமனை முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீப ஒளி பண்டிகை நேற்றுக் கொண்டாடப்பட்டது. பட்டாசு , பலகாரம் என அனைவரும் வெகு விமர்சயாக கொண்டாடினர். குறிப்பாக பட்டாசுகளை சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அவரவருக்கு விருப்பமானவமற்றை வெடித்து மகிழ்ந்தனர். இதன் விளைவாக சென்னை பெருநகர் முழுவதுமாக புகைமண்டலாமானது.

குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரத்தில் அருகிலுள்ளவர்கள் கூட தெரியாத வகையில் புகைமண்டலமானது. நீதிமன்றம் தெரிவித்தன் அடிப்படையில் அரசு நேரக்கட்டுபாடு விதித்திருந்தது. இருப்பினும் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதன் விளைவாக இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. இது ஒவ்வொருவரும் 45 சிகரெட் புகைத்த அளவிற்கு புகையை சுவாசித்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு புகையை சுவாசிப்பதால் என்னவெல்லாம் நேரும்? பிணி வகைகளை அடுக்கும் சென்னை KMC மருத்துவமனை முதல்வர்!

இது குறித்து பேசிய அரசு கீழ்பாக்கம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், பட்டாசுகளில் பலவித அதி வேதிப்பொருள்கள் ஜிங்க், காப்பர் கால்சியம், பேரியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலானவை இருப்பதனால் அது உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடனடி பாதிப்புகள் ஆக வாந்தி , சுவாச கோளாறுகள் உள்ளிட்டவையும் மேலும் ரத்த சோகை, நுரையீரல் பிரச்சனை இதய பிரச்சனை, ஆஸ்துமா, காய்ச்சல் மூச்சுதிணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்றார்.

இதிலுள்ள நுண்துகள்கள் சுவாச பாதை வழியாக நுரையீரலை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றார். மூச்சுதிணறல் கூட ஏற்படக்கூடும். தொண்டையில், இருதயத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கக்கூடும், பேரியம் பச்சை நிறத்தில் காப்பர் ஊதா நிறத்தில் ஒளிரும் அது தான் சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு பிடிக்கும். ஆனால் அதனால்தான் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல் ஒலி மாசு ஏற்பட்டு காது கேட்கும் திறனை இழக்கும் நிலை ஏற்படும். அரசு சொல்லும் நேரத்தை கடந்தும் பட்டாசு வெடிக்கின்றனர். அதை தவிருங்கள் அரசு சொல்வதை கேளுங்கள். பசுமை பட்டாசுகளை வெடியுங்கள். அதனால் பாதிப்பு குறைவு. புகையை சுவாசித்துவிட்டோம், நல்ல காற்றை சுவாசிக்கவேண்டும், மூச்சு பயிற்சி செய்தல் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories