கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013ல் திருமணம் செய்ததாகவும், 2016முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதால் தங்களை சேர்த்து வைக்க கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தனக்கும், கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரிக்க கோரி ஜோசப் பேபியும் மனுத்தாக்கல் செய்தார்.
இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலைச் செல்வி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பண பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள்,தங்களுக்குள் எழும் பிரச்சைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.