திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட 60வது வார்டு குளத்துப்புதூரில், ஆண்டிபாளையம் குளம் எதிரில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சுமார் 29 கோடி மதிப்பில் நடக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலைய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடப் பணிகள் போலவே தற்போது இந்தப் பகுதியிலும் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும்போது விரிசல் ஏறப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்ட தரமற்ற கட்டிட பணிகளில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து மன்னுக்குள் புதைந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 29.3 கோடி ரூபாயில் இந்த பணிகள் ஆரம்பித்தபோதே அப்பகுதி மக்களால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளானது.
ஆண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள 70 ஏக்கர் பரப்பளவிலான குளத்திற்கு நேர் எதிரே தான் இந்த இடமும் அமைந்துள்ளது. 1910ம் ஆண்டு அரசு ஆவணங்களின் படி இந்த இடம் நீர்நிலையாக உள்ளது என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டத்தை பயன்படுத்தி அரசு ஆவணங்களில் இது நீர்நிலை இடம் அல்ல என மாற்றி இப்போது அரசு கட்டிடம் கட்டுப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு நடப்பதோடு மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் இந்த கட்டிடத்தால் இதில் பணிபுரிய போகும் அதிகாரிகளின் உயிரும் கேள்விக்குறியாக உள்ளது என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தவர்கள். கட்டிட பணிகள் ஆரம்பிக்கும் போது அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் கூட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், நீர்லைக்கான இடம் என்ற ஆதாரத்தை வைத்து தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
நீதிமன்றத்தை தாண்டி நீர்நிலை மீது அக்கறை கொண்டும் , பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த கட்டிடத்தை இங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இந்த கட்டிடப் பணிகளுக்கு வெகு அருகாமையில் 2015ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டி முற்றிலும் நீர் சூழ்ந்து உள்ளதால் இந்த நீர்த்தேக்கத் தொட்டியும் பூமியில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
விபரம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். இந்த கட்டட பணி தரமற்ற உள்ளதாகவும், குளத்தின் எதிரில் இருந்த சின்ன குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே கட்டிடப் பணிகளுக்கு இடையே குளம்போல் தேங்கிய மழை நீரில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத புதிய கட்டிடம் மன்னுக்குள் புதைந்துள்ளது என பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதே நிலையில் தற்போது கழிவு நீர் இருந்தால் ஆண்டிபாளையம் குளம் கழிவு நீரால் மாசு அடையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்!