தமிழ்நாடு

”ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள் விளையாட்டு மைதானம்” - அமைச்சர் மெய்யநாதன் கூறிய அசத்தல் தகவல் இதோ!

வடசென்னையின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் மினி உள்விளையாட்டு மைதானம் அமைக்கப்படும், அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

”ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள் விளையாட்டு மைதானம்” - அமைச்சர் மெய்யநாதன் கூறிய அசத்தல் தகவல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் விளையாட்டு மைதானத்தை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் மற்றும் மைதானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், விளையாட்டு மையத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,

கடந்த ஆட்சியில் இந்த மைதானத்தில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும், சரியான நிர்வாக பணிகளும் மேற்கொள்ளவில்லை. சென்னை மாநகரத்தில் மிக முக்கியமான சிறப்பு மிக்க இந்த மைதானத்தை மறு சீரமைத்து உலக தரமிக்க டென்னிஸ் மைதானமாக மாற்றுவதற்காக இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டோம்.

கடந்த ஆண்டு இந்த மைதானத்தை மறுசீரமைப்பதற்கு ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு எந்த ஒரு பணியும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அந்த பணியினையும் விரிவுபடுத்தி விரைவில் பணிகள் முடித்து உலகத்தரம் வாய்ந்த மைதானமாக நுங்கம்பக்கம் மைதானம் மாற்றப்படும்.

உலக அளவில் இந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உள்ள மைதானங்களில் செயற்கை புல் தரைகள் அமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது,

முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அப்பணிகள் நடைபெற்று வருகிறது. படிப்படியாக அனைத்து விளையாட்டு மைதானங்களில் ஆறு மாதத்திற்குள் செயற்கை விளையாட்டு புல்தரை அமைக்கும் பணி துவங்கப்படும்.

வடசென்னை பொருத்தவரை இரண்டு விதமான விளையாட்டுகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அங்கு அதிகமாக குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சிலம்பம் சுற்றும் வீரர்கள் அதிகளவில் உள்ளனர்.

ஆகவே வடசென்னை பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் சுமார் 5 அல்லது 6 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து மினி உள்விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த இடத்தையும் ஆய்வுகள் செய்யும் பணிகளும் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories