தமிழ்நாடு

கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைவதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தத்தம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

பெரம்பலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories