கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் மூலம் பெட்டிங் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு மற்றும் உட்கோட்ட குற்றப்பிரிவு போலிஸார் கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டை சோதனை செய்தபோது பணம் 20 லட்சம் ரூபாய், ஒரு கார், ஒரு ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனம் மற்றும் பெட்டிங்கிற்கு பயன்படுத்திய 6 கம்ப்யூட்டர் மானிட்டர், 1 ஸ்மார்ட் எல்இடி டிவி ஆகியவை கைப்பற்றினர்.
மேலும் மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன்(27), க.செல்லம்பட்டு, சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, கோகுல்நாத், , அரவிந்த், பிரகாஷ், மணிகண்டன்(24) த/பெ.ராஜா, காந்திநகர் மற்றும் பாலா ஆகியோரை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பணம் பறித்து வந்த நிகழ்வு கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது