தமிழ்நாடு

“வீண் விளம்பர அலங்காரங்கள் இல்லை... முதல்வரின் புகைப்படம் இல்லை” : இது மு.க.ஸ்டாலின் அரசு!

வெற்று விளம்பரங்களை விரும்பாமல், மக்களுக்கான திட்டங்கள் நேரடியாக மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதில் மட்டுமே முதலமைச்சர் கவனம் செலுத்தி வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

“வீண் விளம்பர அலங்காரங்கள் இல்லை... முதல்வரின் புகைப்படம் இல்லை” : இது மு.க.ஸ்டாலின் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உதவும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்ய தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டமானது மாணவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

“வீண் விளம்பர அலங்காரங்கள் இல்லை... முதல்வரின் புகைப்படம் இல்லை” : இது மு.க.ஸ்டாலின் அரசு!

பள்ளிக் குழந்தைகளுக்கான இத்திட்டத்தின் தொடக்க விழா, வழியெங்கும் தோரணங்களோ வண்ண அலங்காரங்களோ ஏதுமின்றி எளிமையான முறையில் இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் முதலியார்குப்பத்தில் நடைபெற்றது.

மேலும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட தொடக்க விழா மேடைக்குப் பின்னணியில் இடம்பெற்ற திட்டம் குறித்த பேனர், முதல்வர் வெளியிட்ட கையேடு, இணையதளம் என எங்குமே முதலமைச்சரின் புகைப்படம் கூட இடம்பெறவில்லை.

“வீண் விளம்பர அலங்காரங்கள் இல்லை... முதல்வரின் புகைப்படம் இல்லை” : இது மு.க.ஸ்டாலின் அரசு!

கடந்த கால ஆட்சியாளர்கள் விளம்பர வெறியால் மக்களை வதைத்துவந்த நிலையில், வெற்று விளம்பரங்களை விரும்பாமல், மக்களுக்கான திட்டங்கள் நேரடியாக மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதில் மட்டுமே முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் கவனம் செலுத்தி வருவது மக்களிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories